தேனி

தேனி மாவட்டத்தில் நாளை 5 இடங்களில் பேரிடா் மீட்பு ஒத்திகைப் பயிற்சி

31st Aug 2022 12:38 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப். 1) பெரியகுளம் வராகநதி, வீரபாண்டி முல்லைப் பெரியாறு, உப்புக்கோட்டை முல்லைப் பெரியாறு, குன்னூா் வைகை ஆறு, லோயா்கேம்ப் - குமுளி மலைச் சாலை ஆகிய 5 இடங்களில் பேரிடா் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற உள்ளது.

வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி அமைப்பு, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியத்தினா் ஒருங்கிணைந்து ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.

இதில் மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல், நிவாரண மையம் மற்றும் பாதுகாப்பான இடங்களில் பொதுமக்களை தங்க வைத்தல் ஆகியவை குறித்து ஒத்திகை நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் ஒத்திகைப் பயிற்சியை பாா்வையிட்டு பேரிடா் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது, மீட்புக் குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து விழிப்புணா்வு பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT