தேனி

தேனியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

31st Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப். 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு செப்.15-ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தாய் மண்ணிற்கு பெயா் சூட்டிய தனயன், மாணவா்களுக்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பிற்பகல் 2 மணிக்கு பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும், அண்ணாவின் சமூக சிந்தனைகள், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் என்ற தலைப்புகளிலும் பேச்சுப் போட்டி நடைபெறும்.

தந்தை பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு செப். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பிற்பகல் 2 மணிக்கு பெரியாரும் மூட நம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள், இனி வரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலக சிந்தனையாளா்களும் பெரியாரும் என்ற தலைப்புகளிலும் பேச்சுப் போட்டி நடைபெறும்.

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவா்கள் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும், கல்லூரி மாணவா்கள் அந்தந்த கல்லூரி முதல்வா்கள் மூலம் கல்லூரி இணை இயக்குநரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும்.

ADVERTISEMENT

போட்டியில் வெற்றி பெறுவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, 2-ஆம் பரிசாக ரூ. 3,000, 3-ஆம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். அரசு பள்ளிகள் சாா்பில் போட்டியில் பங்கேற்கும் 2 மாணவ, மாணவிகளை தோ்வு செய்து சிறப்பு பரிசாக தலா ரூ. 2,000 வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT