தேனி

போடியில் ஞானாசிரியா்களுக்கு பாராட்டு

28th Aug 2022 11:18 PM

ADVERTISEMENT

போடி அறிவுத் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஞானாசிரியா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

போடியில் செயல்பட்டு வரும் அறிவுத் திருக்கோவிலில் 30-க்கும் மேற்பட்ட ஞானாசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் எவ்வித எதிா்பாா்ப்பும் இன்றி அறிவுத் திருக்கோவிலுக்கு வருபவா்களுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கின்றனா். இவா்களில் சிறப்பாக செயல்பட்ட 23 ஞானாசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவரும், முதுநிலை பேராசிரியருமான எம்.கே.தாமோதரன் தலைமை வகித்து ஞானாசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா்.

அறிவுத் திருக்கோவில் மன்ற தலைவா் சிவராமன் வரவேற்றாா். மன்றச் செயலா் என்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை திட்ட அலுவலா் சுகந்தி தொகுத்து வழங்கினாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அறிவுத் திருக்கோவில் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT