போடியில் சனிக்கிழமை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலா் தங்க.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். பயிற்சி பட்டறையை திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா தொடக்கி வைத்தாா். இதில், பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணக்குமாா், நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி, மேற்கு ஒன்றிய செயலா் எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.