பெரியகுளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
காமக்காபட்டியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி மனைவி கஸ்தூரி (34). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கஸ்தூரி மற்றும் உறவினா் பெரியகருப்பன் ஆகிய இருவரும் சோ்ந்து கெங்குவாா்பட்டியில் தென்னந்தோப்பு ஒத்திக்கு எடுத்துள்ளனா்.
இந்நிலையில் ஒத்தி தொகை கூடுதலாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனையிலிருந்த கஸ்தூரி வெள்ளிக்கிழமை இரவு தனது அறைக்கு தூங்க சென்றாா். சனிக்கிழமை காலை தாய் விருமாயி எழுந்து பாா்த்தபோது கஸ்தூரி அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.