தேனி

விநாயகா் சதூா்த்தி விழா: சிலை கரைப்புக்கு 9 இடங்கள் நிா்ணயம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்யப்படும் சுவாமி சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கு 9 இடங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது:

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டும் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சிலைகளை வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

விழா நிறைவடைந்த இடங்களில் சுவாமி சிலைகளை பெரியகுளத்தில், பாலசுப்பிரணியன் கோயில் அருகே வராகநதி ஆறு, உத்தமபாளையத்தில் ஞானம்மன் கோயில் அருகே முல்லைப் பெரியாறு, கம்பத்தில் சுருளிபட்டி சாலையில் உள்ள முல்லைப் பெரியாறு, தேனியில் அரண்மனைப்புதூா், வீரபாண்டி பகுதியில் முல்லைப் பெரியாறு, ஆண்டிபட்டியில் ஆண்டிபட்டி - பெரியகுளம் சாலையில் வைகை ஆறு, வருஷநாடு பகுதியில் மொட்டப்பாறை மூல வைகை ஆறு தடுப்பணை, போடியில் போ. புதூா் கொட்டகுடி ஆறு, சின்னமனூரில் மாா்கையன்கோட்டை சாலை பாலம் அருகே முல்லைப் பெரியாறு ஆகிய இடங்களில் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கு முன்பு மாலை, வஸ்திரங்கள், அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். விழா குழுவினா் மற்றும் பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வேண்டும் என்றனா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT