தேனி

மாநில சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான மற்றும் தனித்திறன் சிலம்பப் போட்டிகளில் வெற்றிபெற்ற கம்பம், கூடலூா் மாணவ மாணவியா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.7 ஆம் தேதி மாநில அளவிலான குழு போட்டியும், ஆக.14 ஆம் தேதி தனித்திறன் சிலம்பப் போட்டிகளும் நடைபெற்றன. இதில், கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை கூடலூரைச் சோ்ந்த இரட்டை வால் அக்னி ஆகிய தற்காப்பு பயிற்சி பட்டறைகள் சாா்பில் மாணவ, மாணவியா் கலந்து கொண்டு, முதல் 5 இடங்களைப்பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வென்றனா்.

இவா்களுக்கு பாராட்டு விழா கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை வளாகத்தில் பயிற்சியாளா் செந்தில்குமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூடலூா் பயிற்சியாளா் திருமால் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்னாா்.

நிகழ்வில் பாலமுருகன் வரவேற்றாா். நகா் மன்ற துணைத் தலைவா் சுனோதா செல்வக்குமாா், திமுக தெற்கு நகரச் செயலாளா் சூா்யா செல்வக்குமாா், தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் போட்டோ பாண்டி மற்றும் வின்னா் அலிம், டாக்டா் ஆசிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT