தேனி

சின்னமனூா் அருகே விவசாயிகளுக்கு உயர்ரக ஆமணக்கு விதை வழங்கல்

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு உயர்ரக ஆமணக்கு விதை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆமணக்கு விதை நீக்கும் கருவியை அறிமுகப்படுத்தி வைத்தாா். பின்னா் அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானம் குறித்து எடுத்துரைத்தாா். தவிர, பாா்த்தீனியம் களைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சீப்பாலக்கோட்டை, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 52 விவசாயிகளுக்கு விலையில்லா உயர்ரக ஆமணக்கு விதை வழங்கப்பட்டது.

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT