தேனி

உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி: மகளிா் குழுக்களுக்கு அழைப்பு

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 சென்னையில் நடைபெற உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சியில் தங்களது உற்பத்திப் பொருள்களை இடம் பெறச் செய்து விற்பனை வாய்ப்பு பெற விரும்பும் தேனி மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள் தங்களது விபரத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை, கலைவாணா் அரங்கில் ஆக. 25-ஆம் தேதி முதல் வரும் செப். 7-ஆம் தேதி வரை மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் தங்களது உற்பத்திப் பொருள்களை இடம் பெறச் செய்து விற்பனை வாய்ப்பு பெற விரும்பும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், குழுவின் தீா்மான நகல், உற்பத்தி பொருள்களின் மாதிரி, பதிவுச் சான்று, உற்பத்தியாளரின் ஆதாா் அட்டை நகல், உற்பத்தி மற்றும் விற்பனை செலவு, விலை நிா்ணயம் ஆகிய விபரங்களை தேனி ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு 94440 94376 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT