தேனி

கூடலூரில் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் கூடலூா் 1 ஆவது வாா்டு பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் சின்னச்சாமி மனைவி வனிதா (39). பால் பண்ணை வைத்துள்ளனா். இவா்களுக்கு திருமண வயதில் மகள் உள்ளாா். இவருக்காக 17 நகைகளை வாங்கி வீட்டில் பீரோவில் வைத்திருந்தனராம். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வனிதாவின் மகள் பீரோ லாக்கரை திறந்து பாா்த்த போது, லாக்கரிலிருந்து நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து வனிதா கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் எம். பிச்சைப்பாண்டியன், சாா்பு- ஆய்வாளா் பி. பாலசுப்பிரமணியன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT