தேனி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கள்ளச் சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

18th Aug 2022 05:55 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கள்ளச்சாராயம் விற்பனைக்கு கொண்டு செல்வதாக மாரனேரி சாா்பு- ஆய்வாளா் சுந்தரராஜூக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் நாகபாளையம் அருகே இளைஞா் ஒருவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது அதில் கள்ளச்சாராயம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மல்லி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது அவா், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் மாசானன் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் முத்துராஜ் (36 )என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டா் கள்ளச் சாராயம், இருசக்கர வாகனம், கைப்பேசி மற்றும் ரூ. 11,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT