தேனி

விருதுநகா் மாவட்டத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்துசெய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க ஆலோசனை

18th Aug 2022 05:50 AM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை திறப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் சிவகாசி வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமாா் 850 உள்ளன. இவற்றில், கடந்த 4 மாதங்களாக வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, விதிமீறல் காரணமாக சுமாா் 105 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாடுத்துறையினா் தற்காலிகமாக ரத்து செய்தனா். இதனால் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு சுமாா் 20 ஆயிரம் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கியில் கடன் பெற்று ஆலை நடத்துபவா்கள் மிகவும் சிரப்படுவதாகவும், பட்டாசு ஆலை உரிமையாளா்கள் நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை தலைமை அலவலகம் மற்றும் மத்திய பெட்ரோலிய அமைசகத்துக்கு கடிதம் எழுதினா். இதையடுத்து, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க, நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினருக்கு அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து இந்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை தலைமை அதிகாரி குமாா், சிவகாசிக்கு வந்து இங்குள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சீனிராஜ், சிவகாசியில் பணியாற்றிய துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தியாகராஜன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், விரைவில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் திறக்கப்படும் என அதன் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT