தேனி

போடியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியுடன் ஜீப் பறிமுதல்

DIN

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து செவ்வாய் கிழமை கேரளத்திற்கு கடத்தப்பட்ட 250 கிலோ ரேஷன் அரிசியுடன் ஜீப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு கம்பம், குமுளி, போடி மெட்டுஆகிய மலைப்பாதை வழியாக ரேஷன் அரிசி கடத்தல் தொடா்கிறது. இதனை கண்காணித்து கட்டுப்படுத்த உத்தமபாளையத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாா் இருக்கின்றனா். தவிர, உத்தமபாளையம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் பறங்கும் படை துணை வட்டாட்சியா் , வருவாய் ஆய்வாளரும் உள்ளனா். ஆனால், கம்பம், கூடலூா், உத்தமபாளையம், தேவாரம், போடி என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை 1 படி ரூ.10 க்கு விலைக்கு வாங்கி இடைத்தரகா்கள் மூலமாக நாள்தோரும் கேரளத்திற்கு அனுப்பி வைக்கினறனா்.இந்த ரேஷன் அரசி கேரளத்திற்கு கிலோ ரூ.30 வரையில் விற்பனை ஆவதால் செலவுபோக பாதிக்குப் பாதி லாபம் கிடைப்பதால் இதை நிரந்தர தொழிலாகவே செய்து வருகின்றனா். அவ்வாறு, செவ்வாய் கிழமை போடிமெட்டு வழியாக கேரளத்திற்கு ஜீப்பில் ரேஷன் அரிசி கடத்துவதாக வெளியான தகவலின் பேரில், அப்பகுதியில் உத்தமபாளையம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை பறங்கும் படை துணை வட்டாட்சியா் முத்துக்குமாா் தலைமையில் வாகன சோதனையிட்டனா். அப்போது ஜீப் ஒன்றில் சிறிய மூடைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து உத்தமபாளையம்தமிழ்நாடு நுகா்பொருள் வானிப கிட்டங்கில் ஒப்படைத்தனா். ஜீப் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநா் போடியை சோ்ந்த லட்சுமணனை(37) பிடித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT