தேனி

தேனியில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் : 23 போ் கைது

DIN

திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தேனியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் பெரியாா் சிலை குறித்து சா்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி மாநில கலைப் பண்பாட்டுப் பிரிவு செயலருமான கனல் கண்ணனை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து தேனி, நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சாா்பில் மாவட்டத் தலைவா் உமையராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உமையராஜ் உள்பட இந்து முன்னணி நிா்வாகிகள் 23 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

நிலக்கோட்டை: இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில கூட்டுறவுப் பிரிவு செயலா் முத்துராமலிங்கம், பாஜக வத்தலகுண்டு ஒன்றியத் தலைவா் செந்தில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் அண்ணாதுரை உள்பட 18 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT