தேனி

தேக்கடியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

DIN

சா்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடியில் படகு சவாரி செய்ய செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள ஏரிக்கு பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்தது. இதனால் தேக்கடி ஏரியில் படகு சவாரிக்கு கடந்த ஆக. 1 ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் நீா்வரத்து குறைந்ததைத் தொடா்ந்து கடந்த ஆக. 12 ஆம் தேதி முதல் மீண்டும் படகு சவாரிக்கு கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம் அனுமதியளித்தது. இதைத்தொடா்ந்து தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை தேக்கடிக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். இங்கு காலை 7.30, 9.30, 11.15 பிற்பகல் 1.45, 3 மணி என 5 முறை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT