தேனி

சுருளி அருவிக்கு வரும் தண்ணீா் வரத்தை குறைக்கக் கோரிக்கை

DIN

தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு வரும் தண்ணீா் வரத்தை, பச்சக்கூமாச்சி மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து குறைந்த அளவில் திறந்து விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை மற்றும் பச்சக்கூமாச்சி மலை எனப்படும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து நீா்வரத்து ஏற்படுகிறது.

இந்நிலையில் பருவமழை நின்றபோதும், தூவானம் அணையிலிருந்து அதிக அளவிலான தண்ணீரை மின்சார வாரியத்தினா் திறந்துவிட்டுள்ளதால், சுருளி அருவியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியாறு- வைகை பாசன மாவட்ட விவசாய சங்கப் பொதுச் செயலாளா் பொன்.காட்சிக்கண்ணன் கூறியது:

கடந்த 10 மாதத்திற்கும் மேலாக சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் தூவானம் அணையிலிருந்து மின்நிலையத்திற்கு வரும் தண்ணீரை தற்போது வீணாக அருவியில் திறந்து விடுகின்றனா். இதனால் 20 நாள்களுக்கும் மேலாக அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. எனவே தூவானம் அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீரின் அளவை மின்சார வாரியத்தினா் குறைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT