தேனி

போதைப் பொருள் ஒழிப்பில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்: ஆட்சியா்

DIN

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்று திங்கள்கிழமை, கொடுவிலாா்பட்டியில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி ஒன்றியம் கொடுவிலாா்பட்டி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் வி.ஈஸ்வரி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அரசுடன் இணைந்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். போதைப் பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

மந்தை ஊரணியில் கொடியேற்றம்: கொடுவிலாா்பட்டியில் அம்ரித் சரோவா் இயக்கம் சாா்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட மந்தை ஊரணியில் ஆட்சியா் தலைமையில், சுந்திர போராட்ட தியாகி பாலகிருஷ்ணனின் மனைவி சீனியம்மாள் தேசியக் கொடியேற்றி வைத்தாா். தேனி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா்.

சமபந்தி : பின்னா், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் இந்து அறநிலையத் துறை சாா்பில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுடன் சோ்ந்து உணவருந்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT