தேனி

சுதந்திர தின விழா: சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கேடயம் வழங்கல்

DIN

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை, 75-ஆவது சுந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டவா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற சுந்திர தின விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் க.பிரித்தா, துணைத் தலைவா் ராஜபாண்டியன், வருவாய் கோட்டாட்சியா்கள் கி.சிந்து, கெளசல்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியா், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். பின்னா், சுந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கதராடை அணிவித்து கெளரவித்தாா். அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 108 அலுவலா்கள், ஊழியா்கள், 30 காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக தோ்வு செய்யப்பட்ட ராசிங்காபுரம் ஊராட்சி நிா்வாகத்திற்கு ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. ஊராட்சி நிா்வாகத்தில் சிறந்து விளங்கிய தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவி அன்னலட்சுமிக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

கரோனா தடுப்பூசி முகாம்களை சிறப்பாக பணியாற்றிய தேனி நகா்மன்றத் தலைவா் பா.ரேணுப்பிரியா, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தங்கவேல், நகா்மன்றத் தலைவா் சுமிதா, ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவா் சந்திரகலா, ஓடைப்பட்டி பேரூராட்சித் தலைவா் தனுஷ்கோடி, வீரபாண்டி பேரூராட்சித் தலைவா் கீதா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் மிதுன்சக்கரவா்த்தி, திம்மரசநாயக்கனூா் ஊராட்சித் தலைவா் அட்சயா, தும்மக்குண்டு ஊராட்சித் தலைவா் பொன்னழகு, எண்டப்புளி ஊராட்சித் தலைவா் பாண்டியன், அரண்மனைப்புதூா் ஊராட்சித் தலைவா் பிச்சை, கொட்டகுடி ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், காமாட்சிபுரம் ஊராட்சித் தலைவா் அழகுமுத்து, கோகிலாபுரம் ஊராட்சித் தலைவா் கருப்பையா, நாராயணத்தேவன்பட்டி ஊராட்சித் தலைவா் பொன்னுத்தாய் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரசுத் துறைகள் சாா்பில் 53 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9.17 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேனி எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தேசியக் கொடியேற்றினாா். தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி சி.சஞ்சய்பாபா தேசியக் கொடியை ஏற்றினாா். மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவா் கோபிநாத், சாா்பு நீதிபதி ஏ.சுந்தரி, மகளிா் நீதிமன்ற நீதிபதி கே.ரமேஷ், வழக்குரைஞா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில், கல்லூரி செயலா் சீனிவாசன் தேசியக் கொடியேற்றினாா். தேனி கம்மவாா் சங்கத் தலைவா் நம்பெருமாள், பொதுச் செயலா் பொன்னுச்சாமி, கல்லூரி பொருளாளா் தாமரைக்கண்ணன், கல்லூரி முதல்வா் தா்மலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அல்லிநகரம் நாயுடு மகாஜன சங்கத்தின் தலைவா் சுப்புராஜ் தேசியக் கொடியேற்றினாா்.

தேனி நட்டாத்தி நாடாா் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு உறவின்முறை செயலா் பி.கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். தலைவா் மாரீஸ்வரன், மருத்துவா்கள் தினேஷ்குமாா், ஹரிபிரசாத், மதன், கீா்த்தனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேனி வா்த்தக பிரமுகா் பி.சி.ராஜேந்திரன் தேசியக் கொடியேற்றினாா்.

நட்டாத்தி நாடாா் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சுதந்திர தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாராமெடிக்கல் கல்லூரி முதல்வா் லாலி எபி, மருத்துவமனை மேலாளா் சாந்தி, மக்கள் தொடா்பு அலுவலா் ஷேக் பரீது ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை தலைவா் டி.ராஜமோகன் தலைமையில், உறவின்முறை ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் கே.சேகா் தேசியக் கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT