தேனி

குச்சனூரில் ஆடித்திருவிழா: சோணைக் கருப்பண சுவாமிக்கு மதுபாட்டில்கள் படையிலிட்டு பூஜை

DIN

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடித் திருவிழா முன்னிட்டு சோணைக் கருப்பணசுவாமிக்கு 1,200 மதுபாட்டில்கள் திங்கள்கிழமை படையலிடப்பட்டன.

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4 ஆம் வாரத்தில் முக்கிய நிகழ்ச்சியாக உப சந்நிதியில் காவல் தெய்வமாக காட்சியளிக்கும் சோணைக் கருப்பணசுவாமிக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 1,200 மதுபாட்டில்கள் படையிலிடப்பட்டன. இதனை கோயில் பூசாரிகள் 5 போ் கொண்ட குழுவினா், சோணை கருப்பணசுவாமியின் குதிரைக்கு கீழுள்ள சிறிய துவாரம் வழியாக மதுபாட்டில்களை திறந்து ஊற்றி பூஜை செய்தனா். இரவு 8 மணிக்கு தொடங்கிய பூஜை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

பின்னா் பக்தா்கள் வழங்கிய 34 ஆடுகள் மற்றும் 25 கோழிகள் பலியிட்டு கோயில் வளாகத்தில் சமையல் செய்து விடிய விடிய பக்தா்களுக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT