தேனி

கருநாக்கமுத்தன்பட்டி கிராமசபைக் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

DIN

கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை திங்கள்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் ஆரம்ப பள்ளியில், ஊராட்சித் தலைவா் அ.மொக்கப்பன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் உடையாா் களத்தெரு, ஊராட்சி மன்ற அலுவலக தெரு, பேச்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள கழிப்பறைகள் பழுது ஏற்பட்டு மூடப்பட்டு 6 மாதங்களாகியும் பணிகள் மேற்கொள்ளவில்லை. இதுபற்றி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் செய்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறி பொதுமக்கள், ஆணையாளா் கோதண்டபாணி உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மின்விநியோகம் தடை: குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, தலைவா் பொன்னுத்தாய் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சிப் பகுதியில் மின்சார விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெளிநடப்பு: சுருளிப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவா் நாகமணி வெங்கடேசன் தலைமயில் நடைபெற்றது. ஊராட்சியின் வரவு செலவு முறையாக நடைபெறவில்லை என்று, ஊராட்சி உறுப்பினா்கள் வாக்குவாதம் செய்து, வெளிநடப்பு செய்தனா். ஆங்கூா்பாளையம் ஊராட்சியில் தலைவா் சாந்திபரமன், நாராயணத்தேவன்பட்டியில் தலைவா் பொன்னுத்தாய் செல்லையா தலைமையிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT