தேனி

பாஜக சாா்பில் வயல்களில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

15th Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கோட்டூரில் பாரதி ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி சாா்பில் விவசாயிகளுடன் இணைந்து வயல்களில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினா்.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட விவசாய அணித் தலைவா் தென்றல் சரவணன், துணைத்தலைவா் வாரணாசி ராமா், மாவட்டச் செயலாளா்கள் ரவி, பானுப்பிரியா, சுப்புராஜ் மற்றும் கோட்டூா் விவசாயிகள், சிறுவா், சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT