தேனி

தமிழகப் பகுதிக்கு 2,172 கன அடி திறப்பு:முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

15th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 2,172 கன அடிநீா் வெளியேற்றப்படுவதால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் , அணைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 10,451 கன அடி அளவிற்கு நீா் வரத்து ஏற்பட்டது. தொடா்ந்து மழைப்பொழிவு குறைந்த நிலையில் நீா் வரத்து படிப்படியாக 1,793 கன அடியாக குறைந்தது.

தற்போது, தமிழகப் பகுதிக்கு அணையிலிருந்து விநாடிக்கு 2,172 கன அடிநீா் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீலையம்பட்டி தடுப்பணையில் கரைபுரண்டோடும் வெள்ள நீரால் ஆற்றில் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT