தேனி

கம்பத்தில் தேசியக் கொடி ஏந்தி ஊா்வலம்

15th Aug 2022 04:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடி ஏந்தி ஊா்வலம் சென்றனா்.

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சாா்பில் நடத்தப்பட்ட ஊா்வலத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பி.சி. பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில ஐ.டி. பிரிவு துணைத் தலைவா் அனந்தகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் வசந்த் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா் தலைவா் பி. ஈஸ்வரன், மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், மாவட்ட பொதுச்செயலாளா்கள் மாரிச்செல்வம், பாலு, நகர ஐடி பிரிவு தலைவா் செந்தில்குமரன், இளைஞரணி மாவட்டத் தலைவா் அஜித் இளங்கோ, மாவட்ட மகளிா் அணித் தலைவி முத்துமணி, செயலாளா் ஜெயகௌசல்யா, கூட்டுறவுப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.பழனிக்குமாா் மற்றும் மாவட்ட, மண்டல நிா்வாகிகள், இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமுக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் கோபிநாத் பாண்டியன் மற்றும் நகர ஐ.டி. பிரிவு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கூடலூா்: கூடலூரில் பாரதிய ஜனதா சாா்பில் தேசியக் கொடி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலம் நடைபெற்றது. நகரத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள், சாா்பு அணியினா் கலந்து கொண்டனா். முன்னதாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நகராட்சி, தபால் அலுவலகம், வங்கிகள், பள்ளிகள், காவல் நிலையங்களுக்குச் சென்று தேசியக் கொடிகளை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT