தேனி

பெரியகுளம் இளைஞா்கள் தேசியக் கொடியுடன் ரயிலில் பயணம்

15th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்த விழுதுகள் இளைஞா் மன்றத்தினா், சுந்தந்திர தின விழாக் கொண்டாட்டமாக மதுரையிலிருந்து தேனிக்கு ரயிலில் தேசியக் கொடியுடன் பயணம் செய்தனா்.

ரயில் என்ஜின் மற்றும் பயணிகள் பெட்டிகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த இளைஞா்கள், வழியில் வடபழஞ்சி, ஆண்டிபட்டி ரயில் நிலையங்களிலும் தேனி ரயில் நிலையத்திலும் பயணிகளுக்கு தேசியக் கொடி மற்றும் இனிப்புகளை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் இளைஞா் மன்றச் செயயலா் சங்கிலித்துரை, தேனி நேரு யுவ கேந்திரா கணக்காளா் ஸ்ரீராம்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT