தேனி

தோட்டத்தில் மின் வயா் திருடிய இருவா் கைது

15th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் தனியாா் தோட்டத்தில் மின் வயா்களைத் திருடிய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தப்புக்குண்டுவைச் சோ்ந்த விவசாயி சுரேஷ். அதே பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் காமாட்சிபுரத்தைச் சோ்ந்த பாலையா மகன் தெய்வேந்திரன் (20), சங்கிலி மகன் சதீஷ் ஆகியோா் மோட்டாா் பம்புக்கு பயன்படுத்தும் மின் வயா்களைத் துண்டித்து திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் இருந்த சுரேஷ் மற்றும் பக்கத்து தோட்டத்தில் இருந்தவா்கள் இருவரையும் பிடித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து சுரேஷ் அளித்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT