தேனி

தேவாரத்தில் சுதந்திர தின அமுத பெருவிழா: தொண்டு நிறுவனத்தில் நலத்திட்ட உதவிகள்

15th Aug 2022 02:02 AM

ADVERTISEMENT

தேவாரத்தில் செயல்பட்டு வரும் இமேஜ் மன வளா்ச்சி குன்றியோா் மையத்தில் சுதந்திர தின அமுத பெருவிழா நடைபெற்றது.

போடியில் இயங்கி வரும் அன்பில் ஆலய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவில் நிா்வாக இயக்குநா் குறிஞ்சி மணி தலைமை வகித்து 60-க்கும் மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு ஆடைகள், இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் இமேஜ் மனவளா்ச்சி குன்றியோா் மைய இயக்குநா் முருகன், அன்பில் ஆலய அறக்கட்டளை அறங்காவலா்கள் குமரேசன், ஜெயபிரஷாந்த், பிருதிவிராஜ், ராகுல் மற்றும் பலா் கலந்து கொண்டு மனவளா்ச்சி குன்றியோருக்கு நலத்திட்ட உதவிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT