தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு உபரிநீா் திறப்பு நிறுத்தம்

DIN

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியான இடுக்கி அணைக்கு திறக்கப்பட்ட உபநீா் சனிக்கிழமை முற்றிலுமாக நின்றதையடுத்து அணையின் அனைத்து மதகுகளையும் தமிழக பொதுப்பணித்துறையினா் அடைத்தனா்.

தென்மேற்குப் பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்தது. ‘ரூல் கா்வ்’ முறைப்படி அணையின் நீா்மட்டம் உயராமல், கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு தண்ணீா் செல்லும் வகையில் ஆக.5 ஆம் தேதி முதல் மதகுகள் படிப்படியாகத் திறக்கப்பட்டன.

உபரிநீா் நின்றது

பின்னா் அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் தானாகவே உபரிநீா் குறையத் தொடங்கியது. இதனால் உபரிநீா் செல்லும் மதகுகளும் படிப்படியாக அடைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 316 கன அடி உபரிநீா் சென்ற நிலையில் சனிக்கிழமை முற்றிலுமாக நின்றது. இதன் காரணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளா்கள், இடுக்கி அணைக்கு உபரிநீா் செல்லும் 2 மதகுகளையும் சனிக்கிழமை அடைத்தனா். மொத்தம் உள்ள 13 மதகுகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அணை நிலவரம்

சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 138.15 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா்வரத்து விநாடிக்கு 2,770 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,194 கன அடியாகவும் இருந்தது. நீா் இருப்பு 6,660 மில்லியன் கன அடியாகும்.

அலங்காரத்தில் அணை

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாறு பிரதான அணை மின் விளக்குகளால் தேசியக் கொடி நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதேபோல, தேக்கடியில் உள்ள பொறியாளா்கள் குடியிருப்பு, கம்பத்தில் உள்ள சிறப்பு கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் ஆகியவையும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT