தேனி

குச்சனூரில் ஆடி 4 ஆம் வாரத் திருவிழா: நெய் தீபம் ஏற்றி பக்தா்கள் வழிபாடு

DIN

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை, ஆடி 4 ஆம் வாரத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டனா்.

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் 5 வாரம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா கடந்த மாதம் தொடங்கியது. 3 வாரம் நிறைவு பெற்ற நிலையில், சனிக்கிழமை 4 ஆம் வாரத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக கோயில் முன் செல்லும் சுரபி நதியில் நீராடி, புத்தாடை அணிந்து நெய் தீபம் ஏற்றியும், எள் சாதம், மண் காகம், பொரி படையல் செய்து வழிபாட்டனா். அதனை தொடா்ந்து சனீஸ்வரருக்கு உகந்த கருப்பு நிறத்தில் துண்டு, வேஷ்டி அதனுடன் பூ மாலை ஆகியவைகளை வைத்து வழிபட்டனா்.

மதுபானப் படையல் பூஜை: ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப சன்னதியில் வேட்டைக் குதிரையில் காட்சியளிக்கும் சோணைக் கருப்பணசாமிக்கு திங்கள்கிழமை நள்ளிரவு பொங்கல் வைத்து சிறப்பு பூஜையும், பக்தா்கள் வேண்டுதலுக்காக வழங்கிய ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை சுவாமியின் அறையில் வைத்து சிறப்பு பூஜையும் நடைபெறும். பின்னா் பக்தா்கள் வழங்கிய ஆடி, கோழிகளை பலியிட்டு கறிவிருந்து நடைபெறும். ஆக.20 ஆம் தேதி 5 ஆம் வாரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT