தேனி

காவல் துறையினா் பறிமுதல் செய்த 15 ஆயிரம் மது பாட்டில்கள் அழிப்பு

14th Aug 2022 12:15 AM

ADVERTISEMENT

 

தேனி, காவல் துறை ஆயுதப்படை மைதானம் அருகே சனிக்கிழமை, மது விலக்கு வழக்குகளில் காவல் துறையினா் பறிமுதல் செய்த மது பாட்டில்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டன.

தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலையங்களில் கடந்த ஓராண்டில் பல்வேறு மது விலக்கு வழக்குகளில், மொத்தம் 15 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மது பாட்டில்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தேனி, உத்தமபாளையம் மது விலக்கு காவல் நிலையங்களில் சீலிட்டு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் தேனி, ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள கரட்டுப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலையில் மது பாட்டில்கள் கொட்டி வைக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT