தேனி

கம்பத்தில் கேரள வாகனங்கள் எரிந்தன: தீ வைப்பா என போலீஸாா் விசாரணை

14th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

 

கம்பத்தில், கேரள பதிவெண் கொண்ட 19 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. அவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதா என போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோயில், தண்ணீா் தொட்டி தெரு பகுதியில் தனியாா் வாகனக் காப்பகம் உள்ளது. அங்கு ஏலத் தோட்ட தொழிலாளா்களை ஏற்றிச் செல்வதற்காக தமிழக, கேரள மாநில வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், கேரள பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீயில் எரிந்து சேதமடைந்தன.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடா்பாக கேரள வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடா்பாக இடுக்கி மாவட்டக் காவல் உளவுத்துறை அதிகாரிகள் ராஜேஷ், சுரேந்தா் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா். உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT

கேரள பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டும் தீயில் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT