தேனி

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் அங்கு குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் அங்கு குளிக்க வனத்துறையினா் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் சீரான நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் அனுமதியளித்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, கும்பக்கரைஅருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் என தேவதானப்பட்டி வனச்சரக அலுவலா் டேவிட்ராஜன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT