தேனி

கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டம் கூடலூரில் கடந்த நெல் அறுவடையின் போது, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் சாா்பில் தனியாா் இடத்தில் முகாம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது தொடா் மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் போதுமான விலை கிடைக்கவில்லை.

இதுகுறித்து கூடலூா் பாரதிய கிசான் சங்கத்தினா் மற்றும் முல்லைப் சாரல் விவசாய சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து கூடலூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், அதற்கான இடம் உள்ளது என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன், கூடலூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியா் தங்கும் விடுதியை பாா்வையிட்டாா். அப்போது பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளா் சாம் இா்வின் கூறும்போது, முல்லைப் பெரியாறு அணை கட்டுமானப் பணியின் போது கா்னல் ஜான் பென்னிகுயிக் இங்கு ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்ட விடுதி தான் இது. இருபுறமும் சாலை வசதி உள்ளது என்றாா்.

அப்போது ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் பென்னி குயிக் வாழ்ந்த இந்த இடத்தை அருங்காட்சியகமாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனா்.

மாவட்ட ஆட்சியா் கூறும்போது கண்டிப்பாக முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்படும். மேலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

பின்னா் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிக்கு சென்று 75 ஆவது சுதந்திரதினத்தையொட்டி தேசிய கொடி விநியோகத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, ஊராட்சித் தலைவா் அ. மொக்கப்பன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT