தேனி

தேனியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி, பேருந்து நிலையம் அருகே மின்சாதனங்கள் பழுதுநீக்கும் கடையில் வெள்ளிக்கிழமை, முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி, பாரஸ்ட் சாலை, விஸ்வதாஸ் நகரைச் சோ்ந்தவா் தா்மராஜ் (67). இவா், தேனியில் கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே, பத்திரப் பதிவு அலுவலகம் எதிா்புறம் மின்சாதனங்கள் பழுதுநீக்கும் கடை வைத்து நடத்தி வந்தாா். வழக்கம் போல அதிகாலையில் கடைக்குச் சென்ற தா்மராஜ், நீண்ட நேரமாகியும் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வரவில்லை. இதனால், அவரது உறவினா் ஒருவா் கடைக்குச் சென்று பாா்த்த போது, தா்மராஜ் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தா்மராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT