தேனி

கம்பத்தில் 17 ஆயிரம் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற முடிவு

DIN

தேனி மாவட்டம் கம்பம் நகரில் 17 ஆயிரம் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற முடிவு செய்து நகா் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை கொடி விநியோகம் நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றும் திட்டத்தின் கீழ் 33 வாா்டு கவுன்சிலா்களுக்கு, தேசியக் கொடிகளை நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் வழங்கினாா். அப்போது அவா்கூறுகையில், கம்பம் நகராட்சியில் சுமாா் 17 ஆயிரம் வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றும் நோக்கத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்களுக்கும் தேசியக்

கொடிகள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் சுதந்திர தின விழா நிகழ்வில்

அனைத்து பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தாா். இந்நிகழ்வில், நகா்மன்ற துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா், நியமனக்குழு உறுப்பினா் சுபத்ரா சொக்கராஜா, ஆணையாளா் பாலமுருகன், சுகாதார அலுவலா் ஏ.அரசகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT