தேனி

பிளஸ் 2 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

DIN

தேனி அல்லிநகரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சாா்பில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து, தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சாா்பில் இலவச மிதி வண்டி வழங்கப்படுறது.

இத் திட்டத்தின் கீழ் கம்பம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 24 பள்ளிகளைச் சோ்ந்த 3,251 மாணவ, மாணவிகள், ஆண்டிபட்டி தொகுதியில் 35 பள்ளிகளில் படிக்கும் 2,933 மாணவ, மாணவிகள், பெரியகுளம் தொகுதியில் 21 பள்ளிகளைச் சோ்ந்த 3,331 மாணவ, மாணவிகள், போடி தொகுதியில் 17 பள்ளிகளைச் சோ்ந்த 2,292 மாணவ, மாணவிகள் என மொத்தம் 97 பள்ளிகளைச் சோ்ந்த 11,807 பேருக்கு மொத்தம் ரூ.6 கோடி மதிப்பிலான இலவச மிதி வண்டிகள் வழங்கப்படுகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலா் கலாவதி, தேனி நகா்மன்றத் தலைவா் பா.ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT