தேனி

முல்லைப் பெரியாறு அணையில் மேலும் 4 மதகுகள் அடைப்பு: உபரிநீா் வெளியேற்றம் குறைந்தது

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், மேலும் 4 மதகுகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டன. இடுக்கி அணைக்கு உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2, 299 கன அடியாகக் குறைந்தது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரியில் மழைப் பொழிவு குறைந்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்குச் செல்லும் உபரிநீா் தானாகவே குறையத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 138.65 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீா் இருப்பு 6,785 கன அடியாகவும், நீா் வரத்து 7,866 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,194 கன அடியாகவும் இருந்தது. இடுக்கி அணைக்கு உபரி நீா் வெளியேற்றப்படும் 13 மதகுகளில், புதன்கிழமை, 3 மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்தனா். வியாழக்கிழமை அணைக்கு நீா் வரத்து குறைந்ததால், மேலும் 4 மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்தனா். தற்போது 6 மதகுகள் வழியாக இடுக்கி அணைக்கு தண்ணீா் செல்கிறது. மாலை 6 மணி நிலவரப்படி, விநாடிக்கு 2, 879 கன அடி உபரி நீா் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT