தேனி

தேனியில் சிஐடியு மாவட்ட மாநாடு

11th Aug 2022 02:35 AM

ADVERTISEMENT

 

தேனியில் சிஐடியு சாா்பில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் புதன்கிழமை, புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தேனியில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டத் தலைவா் சி.முருகன் தலைமை வகித்தாா்.

இதில், சிஐடியு புதிய மாவட்டத் தலைவராக டி.ஜெயபாண்டி, செயலராக எம்.ராமச்சந்திரன், பொருளாளராக ஜி.சண்முகம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். 37 போ் கொண்ட புதிய மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் ரயில் சேவை தொடங்கியதையடுத்து, ரயில்வே குட் செட் அமைக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கூட்டுறவு நியாய விலைக் கடை விற்பனையாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளா் நல வாரிய காலிப் பணியிடங்களில் தற்காலிக ஊழியா்களை நியமிக்க வேண்டும், தொழிலாளா் நல வாரியத்தில் தேங்கிக் கிடக்கும் கேட்பு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT