தேனி

தேனியில் தயாராகும் பசுமை விநாயகா் சிலைகள்

DIN

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பல்வேறு வடிவிலான பசுமை விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதல் நெறிமுறைகளால், விநாயகா் சதுா்த்திக்கு குறைந்த எண்ணிக்கையிலான சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டது. இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு, இந்து அமைப்புகள் மற்றும் பக்தா்கள் தயாராகி வருகின்றனா்.

அதனடிப்படையில், தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் பல்வேறு வடிவில் 4 அடி முதல் 12 அடி உயரமுள்ள விநாயகா் சிலைகள் தயாராகி வருகின்றன. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் கொடைக்கானல், கேரளப் பகுதியிலிருந்தும் விநாயகா் சிலைகளுக்கு முன்பதிவு செய்துள்ளனா்.

பொம்மையகவுண்டன்பட்டியில் விநாயகா் சிலைகளை உருவாக்கி வரும் சன்னாசி என்பவா் கூறியது: இத்தொழிலை பாரம்பரியமாக குடும்பத்தினருடன் சோ்ந்து செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கவில்லை.

இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு ஏராளமானோா் சிலைகளுக்கு முன்பதிவு செய்துள்ளனா்.

முன்னா், களிமண் மூலம் சிறிய அளவிலான விநாயகா் சிலைகள் செய்யப்பட்டன. களிமண் சிலை அதிக எடையுடன் இருக்கும். தற்போது உயரமான மற்றும் நவீன வடிவிலான விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், காகிதக் கூழ், கப்பை மாவு, பசை, குச்சிகள் மூலம் பசுமை சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இது தண்ணீரில் எளிதல் கரையும். நீா்வாழ் உயிரினங்களுக்கும், சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT