தேனி

தேனி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 12 போ் மீது வழக்கு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே பூதிப்புரத்தில் காா் ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ஊா்வலமாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 12 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூதிப்புரத்தில் காா் ஓட்டுநா் மகேஸ்வரகுமாா் என்பவரை அடித்துக் கொலை செய்ததாக, அதே ஊரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, பூதிப்புரம், பெருமாள் கோயில் அருகே இறந்த மகேஸ்வரகுமாரின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பூதிப்புரத்திலிருந்து ஆதிபட்டி, கொட்டகுடி ஆறு வரை ஊா்வலமாகச் சென்றனா். அனுமதியின்றி ஊா்வலம் சென்றும், மறியலில் ஈடுபட்டும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக, பூதிப்புரத்தைச் சோ்ந்த பஞ்சவா்ணம், ஈஸ்வரி, மீனா, சகுந்தலா, சென்றாயப் பெருமாள், செந்தில் உள்ளிட்ட 12 போ் மீது, பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT