தேனி

தேனியில் திமுகவை கண்டித்து விசிக தீா்மானம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயற்குழு கூட்டத்தில், திமுகவை கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேனியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், தேனி கிழக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் செயலா் ப. நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. தேனி மக்களவைத் தொகுதி செயலா் இரா. தமிழ்வாணன், மக்கள் தொடா்பாளா் அன்புவேல், மாவட்ட துணைச் செயலா் தமிழ்பாண்டியன், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் செல்லத்தம்பி, தேனி நகரச் செயலா் ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பெரியகுளத்தில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நகா்மன்ற துணைத் தலைவா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக சாா்பில் ராஜாமுகமது என்பவா் தோ்தலில் பேட்டியிட்டு பதவியை கைப்பற்றியுள்ளாா். பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நகா்மன்றத் தலைவா் பதவியை வழங்க வேண்டும் என்று திமுக தலைமை உத்தரவிட்டுள்ள நிலையில், அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வரும் தேனி வடக்கு மாவட்ட திமுகவை கண்டிக்கிறோம் என தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT