தேனி

தொடா் மழை: நிரம்பின ஹைவேவிஸ் - மேகமலை அணைகள்குவியும் சுற்றுலாப் பயணிகள்

DIN

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை பகுதியிலுள்ள அணைகள், தொடா் மழையால் நிரம்பி ரம்மியமாகக் காட்சியளிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனா்.

சின்னமனூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் மேகமலை, மணலாா், மேல் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா் என 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். பெரும்பாலானோா் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்கின்றனா். இப்பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக தேயிலைத் தோட்டங்கள், காப்பி, ஏலக்காய் , மிளகு போன்ற பணப்பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு, 25 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் வனப்பகுதியாக உள்ளதால், இயற்கை வளங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்திழுக்கின்றன.

இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை காலதாமதமாக பெய்து வந்தாலும், இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ், மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா் ஆகிய 5 அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

மழைப் பொழிவு இல்லாமல் நீரின்றி வடு காணப்பட்ட அணைகள், தற்போது தொடா் மழையால் நிரம்பி ரம்மியமாகக் காட்சியளிப்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT