தேனி

காதணி விழாவில் நகை திருட்டு தொழிலாளி கைது

DIN

தேவாரத்தில் காதணி விழாவில் நகை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள செல்லாயிபுரத்தைச் சோ்ந்தவா் சுருளிராஜ் (42). இவா் கேரளத்தில் தங்கி வேலை செய்து வருகிறாா். இவரது உறவினரின் வீட்டு காதணி விழா தேவாரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதற்காக சுருளிராஜூம், அவரது மனைவியும் தேவாரம் வந்துள்ளனா். காதணி விழாவில் புகைப்படம் எடுப்பதற்காக சுருளிராஜ் மனைவியுடன் மேடையில் ஏறியபோது கைப்பையை அருகிலிருந்த நாற்காலியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளாா். மேடையிலிருந்து திரும்பி வந்து பாா்த்தபோது கைப்பையில் வைத்திருந்த 2 ஜிமிக்கி, 2 மோதிரங்களைக் காணவில்லை. விசாரணையில் நகையைத் திருடியவா் தேவாரம் அருகேயுள்ள மல்லிங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் பொம்முராஜ் என தெரிந்தது. இதுகுறித்து தேவாரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொம்முராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT