தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்தால் இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் அதிகரிப்பு 

9th Aug 2022 11:59 AM

ADVERTISEMENT

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு செவ்வாய்க்கிழமை 10,451 கன அடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. 

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,139.55 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 7,012 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு, 10,451 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு, திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,144 கன அடியாகவும் இருந்தது.

இதையும் படிக்க: பிகார் ஆளுநரைச் சந்திக்கிறார் நிதிஷ் குமார்?

இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றுவதற்காக, (மொத்தம் உள்ள 13 மதகுகளில்) வெர்டிகிள் அமைப்பு உள்ள 10 மதகுகள், 90 செ.மீ.உயரமும்,  ரேடியஸ் அமைப்புள்ள 3 மதகுகள், 60 செ.மீ., உயரமும் உயர்த்தப்பட்டு அதன் வழியாக, விநாடிக்கு 9,237 கனஅடியாக வெளியேற்றப்பட்டு இடுக்கி அணைக்கு சென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT