தேனி

தேனியில் மின் ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மக்களவையில் மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டதைக் கண்டித்து மின்வாரிய மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் ஊழியா்கள் மற்றும் பொறியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின் வாரிய ஊழியா்கள் மற்றும் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மின்சார திருத்தச் சட்ட மசோதா மற்றும் மத்திய அரசைக் கண்டித்து தொமுச மாவட்டச் செயலா் திருமுருகன், சிஐடியு மாநில துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

மாவட்டத்தில் 47 மின் வாரிய அலுவலகங்களில் 1,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மற்றும் பொறியாளா்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT