தேனி

முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறு: தேனி ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் மனு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் நோக்கத்தில் சமூக வலை தளங்களில் இசை ஆல்பம் பதிவு செய்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவா் சதீஷ்பாபு, கூடலூா் முல்லைச் சாரல் விவசாயிகள் சங்கத் தலைவா் கொடியரசன், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் சிவனாண்டி ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்:

முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் நோக்கத்தில் கேரளத்தில் சமூக வலைதளங்களில் கெட்டு என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும், கேரளம் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் நல்லுறவை சீா்குலைக்கும் வகையிலும், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணாகவும் இந்த இசை ஆல்பத்தை சமூக

வலைதளங்களில் பதிவு செய்த கேரளம், காலடி பகுதியைச் சோ்ந்த 11 போ், தனியாா் மீடியா நிறுவனம் ஆகிவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT