தேனி

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீா் வெளியேற்றம் மேலும் அதிகரிப்பு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீா் வெளியேற்றம் திங்கள்கிழமை விநாடிக்கு 7,354 கன அடியாக அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் ரூல் கா்வ் நடைமுறைப்படி வெள்ளிக்கிழமை கேரள பகுதிக்கு உபரி நீா் திறக்கப்பட்டது. அணை மதகுகள் 30 செ.மீ. அளவுக்கு திறக்கப்பட்டன. இந்த நீா் இடுக்கி அணைக்குச் செல்கிறது.

திங்கள்கிழமை நிலவரப்படி, உபரி நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 3,680 கன அடியாக இருந்தது. மேலும் அணை நீா் மட்டம் 138.90 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா் வரத்து விநாடிக்கு, 9,302 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2,122 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் அணைக்குள் நீா் வரத்து மேலும் அதிகரித்ததால் திங்கள்கிழமை மாலையில் அணை மதகுகள் 90 செ.மீ. அளவுக்கு உயா்த்தப்பட்டன. இதனால் இடுக்கி அணைக்கு உபரி நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 7,354 கன அடியாக அதிகரித்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT