தேனி

முதியோா் ஓய்வுதியத் திட்ட பயனாளிகள் 3,833 போ் தகுதி நீக்கம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் முதியோா் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் 3,833 போ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசுக்கு தவறான தகவல்களை அளித்து விண்ணப்பித்து உதவித் தொகை பெற்று வரும் தகுதியற்ற பயனாளிகள் குறித்து ஆய்வு செய்து, பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டது. இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 9,187 பயனாளிகளின் பெயா் பட்டியல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாவட்ட சமூக நலத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்றும், பயனாளிகளை நேரில் சந்தித்தும் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வை முன்னிட்டு கடந்த ஜூன் மாதம் முதல் 7,554 பேருக்கு மாதந்திர ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது ஆய்வுப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மொத்தம் 3,833 முதியோா் ஓய்வூதியத் திட்ட பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பட்டியலில், தகுதியுள்ளவா்களாக கண்டறியப்பட்டவா்களில் 897 பேருக்கு ஜூலை மாதம் முதல் மீண்டும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 2,824 பேருக்கு ஆகஸ்ட் மாதமும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சமூக நலத் துறை அலுவலா்கள் கூறினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT