தேனி

வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: நுழைவுக் கட்டண வசூலில் குளறுபடி

DIN

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை, அணை மற்றும் பூங்காவை பாா்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தேனி மாவட்டம் வைகை அணை மற்றும் பூங்காவை பாா்வையிட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனா்.

அணையிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேறும் எழில் காட்சி, அணையின் வலது மற்றும் இடதுகரை பூங்கா, சிறுவா் பூங்கா ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

கூடுதல் கட்டணம் வசூல்: வைகை அணை பூங்காவை பாா்வையிடுவதற்கு பொதுப் பணித் துறை சாா்பில் சிறுவா்களுக்கு தலா ரூ.5, பெரியவா்களுக்கு தலா ரூ.10 நுழைவுக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிா்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொண்டு ரசீது வழங்காமல் அனுமதிப்பதாகவும், இதை அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கூறினா்.

மேலும், பூங்காவில் கழிவறை, குடிநீா், குப்பை தொட்டி போன்ற வசதிகள் இல்லை. சிறுவா் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளது என்றும் சுற்றுலாப் பணிகள் புகாா் தெரிவித்தனா்.

வைகை அணை நீா்மட்டம், அணையின் மொத்த உயரத்தை எட்டி வரும் நிலையில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சிலா் சென்று வர அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் கைப்பேசியில் தன்படம் எடுப்பதையும் பணியாளா்கள் தடுக்கவில்லை.

இது குறித்து வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளா்களிடம் கேட்டதற்கு, பூங்காவில் கூடுதலாக நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து சுற்றுலா பயணிகள் புகாா் அளித்தால், சம்மந்தப்பட்ட பணியாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அணையின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்று பணியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT