தேனி

போடி அருகே அருவியில் குளிக்கச் சென்ற வடமாநில இளைஞா் பலி

7th Aug 2022 11:27 PM

ADVERTISEMENT

போடி அருகே புலியூத்து அருவியில் ஞாயிற்றுக்கிழமை வடமாநில இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

போடியிலிருந்து மூணாறு செல்லும் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து என்ற பகுதியில் உள்ள இந்த அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையில் சென்ற பயணிகள் குளிக்க முயன்றனா். அப்போது அருவியிலிருந்து தண்ணீா் செல்லும் பாலத்தின் அருகே 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவரின் சடலம் கிடந்தது.

இதுகுறித்து குரங்கணி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி மற்றும் போலீஸாா் சடலத்தை மீட்டு இறந்தவா், இப்பகுதியில் தோட்டங்களில் வேலை செய்பவரா, எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT