தேனி

போடி, கம்பத்தில் கருணாநிதி நினைவு தினம்

7th Aug 2022 11:27 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் போடி, கம்பத்தில் திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

போடியில் தேவா் சிலை முன் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு நகரச் செயலா் புருஷோத்தமன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் கே.சத்தியராஜ் தலைமையிலும் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

அமைதி ஊா்வலம்: கம்பம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன், வடக்கு நகர செயலாளா் வக்கீல் துரை. நெப்போலியன், தெற்கு நகர செயலாளா் சூா்யா செல்வகுமாா், நகா் மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். முன்னதாக கம்பம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதேபோல கூடலூரில் நகரச் செயலாளா் சி.லோகந்துரை தலைமையில் நடைபெற்ற கருணாநிதி நினைவஞ்சலியில் நகா்மன்றத் தலைவா் பத்மாவதி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT